அருண் நெடுஞ்செழியன்

தமிழில் பசுமை மார்க்சியராக அறியப்படும் அருண் நெடுஞ்செழியன் இதுவரை ஐந்து நூல்களை எழுதியுள்ளார். இவரது, 'மார்க்சியச் சூழலியல்’ (விடியல்) என்ற நூல்தான், பசுமை மார்க்சியத்தை நேரடியாகத் தமிழில் பேசிய முதல் நூலாக அறியப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டின் பெருவெள்ளத்தையொட்டி, ‘சென்னை பெருவெள்ளம்: வளர்ச்சியின் அழிவும், அழிவின் வளர்ச்சியும்’ என்ற தலைப்பிலான குறுநூல் பரவலான கவனத்தைப் பெற்றது. தமிழ்ச் சூழலில் சுற்றுச்சூழல், தனிநபர் சாகசவாதம், அடையாள அரசியல், தமிழ்த் தேசிய அரசியல், இந்துத்துவ இயற்கைவாதம், சட்டவாதம், காந்தியப் பொருளாதாரம், சீர்திருத்தவாதம் எனப் பல்வேறு சீரழிந்த போக்குகளை வெளிச்சமிட்டுக் காட்டியதாக, ‘சூழலியல் அடிப்படைவாத அரசியல்’ (உயிர்) நூல் பேசியது. இயற்கையாளர்களான ஸ்டீவ் இர்வின், விட்டேகர், டேவிட் அட்டன்பரோ, ஸ்டீவ் வின்டர் போன்ற ஆளுமைகளின் நேர்காணல்களை, ‘இயற்கை அறிந்து செயல்’ (ஆதி பதிப்பகம்) நூல் தமிழின் சூழலியல் பார்வையை வேறொரு திசைக்குக் கொண்டுசென்றது. அரசியல் கட்டுரைகளை உள்ளடக்கி, ‘இந்திய பாசிசம் இன்று’ (யாப்பு பதிப்பகம்) என்ற நூல் வெளிவந்துள்ளது. சூழலியலை இயங்கியல் பார்வையில் அணுகுவதுடன், தீர்வுகளை நோக்கிய கட்டுரைகளையும் எழுதிவருகிறார். தற்போது மயிலாடுதுறையில் குடும்பத்துடன் வசித்துவருகிறார்.

கட்டுரை அரசியல்

ரீகன், ஜெலென்ஸ்கி முதல் விஜய் வரை

அருண் நெடுஞ்செழியன் 01 Jun 2026

மக்களின் சிந்தனை உருவாக்கத்தில் நிலவும் ஆளும் வர்க்கத்தின் தந்திரமான ஊடுருவலையும், அதன் உலகளாவிய கருத்தியல் மேலாதிக்கத்தையும் ஆராயாமல், அவர்கள் மிக எளிதாக மக்களை மட்டுமே பழிசொல்கிறார்கள்.

கவிதைகள்ரோலாண்ட் பார்த்பிம்ப அரசியல்ராஜ் கௌதமன்இக்பால்சிறுகதைத் தொகுதிஆய்வுகுறுங்கதைபேட்டிதொ.பத்தினாதன்பெருங்கொங்கை பூத்தாள்நாளையும் நாளையேசந்துரு மாயவன்சதுக்கம்தமிழக அரசியல்இலக்கிய நிகழ்வுகள்நிலமெங்கும் பூத்த முகம்கடைசி வெடிச்சத்தம்மழை ஓய்ந்த சாலையில்கஸல்பொம்மை கார்எஸ் அற்புதராஜ்அறபு இலக்கியம்ஆசிரியர் உரைவிமர்சனம்சிறுகதைவாசகர் கூட்டம்சாகுல் ஹமீதுஒரு துளி கருணைஇலக்கிய விமர்சனம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!