அதங்கோடு அனிஷ்குமார்
தமிழ்ப் பெரும்புலவர் அதங்கோட்டாசன் பிறந்த குமரி மாவட்டத்திலுள்ள அதங்கோட்டில் பிறந்த அனிஷ்குமார் ஆங்கிலத்தில் K.S.Anish Kumar எனும் பெயரில் பல்வேறு திறனாய்வு கட்டுரைகள் எழுதி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவரின் கவிதைகள் பல பரிசுகள் பெற்றுள்ளன. தமிழின் தீவிர இதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் இவர் தொகுத்த ’இருப்பின் வலி’ (பெண்ணியக் கட்டுரைகள் ) மற்றும் இவரது படைப்புகளான ’ஆசைக்கு வறுமை இல்லை’ , ’நிறங்களின் பேராசைக்காரர்கள்’,’சொற்கள் எதிர்ச் சொற்கள்’ ஆகியன குறிப்பிடத்தக்க பங்களிப்புகள். இவர் தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆங்கில உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
9486766927,
athangoduanish@rediffmail.com