கவிதை இலக்கியம்

அதங்கோடு அனிஷ்குமார் கவிதைகள்

அதங்கோடு அனிஷ்குமார்
02 Sep 2026
0

தன்னிறை

தன்னைத்  தின்று
செரிக்க  முடியாமல்
தவளையை  விழுங்கிய
தண்ணீர்  பாம்பெனத்
தவித்துக்  கொண்டிருக்கிறான்.

அவன் இருப்பின் மீது 
விழுந்த  கேள்விகள் 
அவன்  முன்
ஆடை  கலைய 
ஆடிக் கொண்டிருக்கின்றன.

மனதின்  ஆழத்தில் 
விழுந்து  அமுக்கிக்  கொண்டிருக்கும் 
குப்பைகளின் வீச்சம்
அவன் நடமாட்டத்தை
நமநமக்கச் செய்து  கொண்டிருக்கிறது.

இன்னும்  இன்னுமென 
உள்ளிறங்கும் 
கூரூசியை  ஒத்த
வார்த்தைகள் 
தன்னைத் தின்று  கொண்டிருப்பதை
உற்றுப் பார்த்தவன்
தன்னைத் தானே தின்பதை
நிறுத்தி 
நிறைவு கொண்டாள்.

மியாவ்

என் நெடுந்தனிமையை
ஒரு ‘மியாவ்’ தின்றுவிட்டு
என் காலடியில் கிடக்கிறது.

மனதின்  ஆழத்தில் 
உறைந்து கிடக்கும்
கேள்விகள்
மெல்ல மேலெழும்பும்போது
ஒரு ‘மியாவ்’ பதிலாகி
மனதின் சலனங்களை
அனந்த சயனம்
கொள்ளச் செய்கின்றன.

வழித்தடம்  மாற  வைக்கும்
வார்த்தைகளை அறுக்கும் 
ஒற்றை ஆயுதமாய்
ஒரு ‘மியாவ்’

தொடும்  போதெல்லாம்
மனசுக்குள்  பரவும் மென்மை
காதுமடல் மலர்த்தும் ’மியாவ்’
பசித்த  பொழுதொன்றில் 
என் பிரிய 
அணில் பிள்ளையைக்
காலுக்கடியில் அமுக்கிக்
கடித்துத் தின்ற நாளிலிருந்து
‘மியாவ்’ மறைந்து 
அணில் பிள்ளையின் 
கடைசி ‘கீச்சொலி’
இமைகளுக்கு
நடுவில் நின்று 
அதிர்கிறது.

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அதங்கோடு அனிஷ்குமார்

தமிழ்ப் பெரும்புலவர் அதங்கோட்டாசன் பிறந்த குமரி மாவட்டத்திலுள்ள அதங்கோட்டில் பிறந்த அனிஷ்குமார் ஆங்கிலத்தில் K.S.Anish Kumar எனும் பெயரில் பல்வேறு திறனாய்வு கட்டுரைகள் எழுதி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவரின் கவிதைகள் பல பரிசுகள் பெற்றுள்ளன. தமிழின் தீவிர இதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் இவர் தொகுத்த ’இருப்பின் வலி’ (பெண்ணியக் கட்டுரைகள் ) மற்றும் இவரது படைப்புகளான ’ஆசைக்கு வறுமை இல்லை’ , ’நிறங்களின் பேராசைக்காரர்கள்’,’சொற்கள் எதிர்ச் சொற்கள்’ ஆகியன குறிப்பிடத்தக்க பங்களிப்புகள். இவர் தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆங்கில உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 9486766927, athangoduanish@rediffmail.com








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

போர்ஏ ஜி கௌதம்இணைய இதழ்கவிதையியல்அவுரிநெல்லிகளும் தேவதைகளும்ஈழம்சதுக்கம்நான் ஏன் பதிப்பிக்கிறேன்குறிகேட்டல்ஆலடியான்இலக்கியக் கூட்டம்நாளையும் நாளையேழ என்ற பாதையில் நடப்பவன்தலித் வரலாறுதமிழக அரசியல்சிறுகதைத் தொகுதிஅதிகாரம்கு இலக்கியன்நறுங்கதைநகர மயமாக்கம்கஸல்கருத்தரங்குகள்இக்பால்மழைவில்கவ்வாலிஇலக்கியம்பின்னவீனத்துவம்அக்காக்கள்ஆசிரியர் உரைதலித் இலக்கியம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!