சாய் வைஷ்ணவி

சேலம் மாவட்டம் சொந்த ஊர். தொழில் நிமித்தம் திருச்சியில் வசிக்கிறார். இளங்கலை உயிர்தொழில் நுட்பவியலில் பட்டம் பெற்று சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் மெடிக்கல் கோடிங் துறையில் பணி புரிந்தார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தலைவியாக ஓய்வு நேரங்களில் ஏற்படுத்திக்கொண்ட புத்தக வாசிப்புப் பழக்கம் இலக்கியத் தேடலுக்கும், கவிதைத் தொகுப்பிற்கும் வழிதந்தது. கணையாழி, ஆனந்த விகடன், உயிர்மை, கொலுசு, நுட்பம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் கவிதைகள் வெளிவந்தன. ‘வலசை போகும் விமானங்கள்’ முதல் கவிதை தொகுப்பு ஆகும். இது புன்னகை விருது, இராஜபாளையம் விருது, அசோகமித்ரன் விருது என மூன்று விருதுகளையும் நற்புகழையும் பெற்றுத் தந்தது. இரண்டாம் தொகுப்பு ‘இடமிருந்து எட்டாம் விரல்’ வாசகசாலை பதிப்பாக வெளிவந்தது. இதில் சமூகத்தின் அவலங்களுக்கு எதிரான புரட்சியையும், பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகவும் பேசுகிறது. சமீபத்தில் ஹெர் ஸ்டோரீஸ் என்ற அமைப்பு 2025 ம் ஆண்டிற்கான ‘வளரும் இளம் எழுத்தாளர்’ என்ற விருதினை அளித்தது. தமிழ் மொழிப்பற்றின் காரணமாக திருச்சி பாரதிதாசன் கல்லூரியில் சமீபத்தில் முதுகலை தமிழ் இலக்கியம் பயின்று பட்டம் பெற்றிருக்கிறார். தொடர்புக்கு: vaishnavim90@gmail.com

கவிதை

சாய் வைஷ்ணவி கவிதைகள்

சாய் வைஷ்ணவி 30 Apr 2026

அவளின் பாதைகளில் உதிர்ந்திருக்கும் காய்ந்த ரோஜா சாயலில் இதழ்கள் வறண்டு கொண்டிருப்பதை எப்படிச் சொல்வோம் அவளிடம்? அவ்வப்போது கடக்கும் செவிலியரிடமிருந்து உதிரும் ஒன்றிரண்டு புன்னகைகளைக் கொண்டு எவ்வளவு நேரம்தான் சமாதானம் செய்வேன் இந்த மதிய நேரத்துப் பசியை

அறபு இலக்கியம்குறிகேட்டல்நவீனத்துவம்கருத்தரங்குகள்அதிகாரம்கஸல்ஒரு துளி கருணைசாகுல் ஹமீதுபொம்மை கார்நேர்காணல்எழுத்தாளரின் மரணம்பிம்ப அரசியல்கிருஷ்ணமூர்த்திகவ்வாலிநானென்பது லெட்டூஸ்இலக்கிய அறிமுகம்டோனி பிரஸ்லர்சுஜித் லெனின்விஜய்இக்பால்ராஜ் கௌதமன்அசகவதாளம்அப்பாவின் குழிஏ ஜி கௌதம்பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்சாட்சிரமீஸ் பிலாலிபெருங்கொங்கை பூத்தாள்கருத்தரங்கங்கள்ஆய்வு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!