டி. தருமராஜ்
மானுடவியல், நாட்டார் வழக்காற்றியல், பண்பாடு, வரலாறு, கலை, இலக்கியம், திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் முப்பது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கு வருபவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரும் கூட. ஜெர்மனியிலுள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்திலும் ட்யூபிங்கன் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் ப்ணியாற்றியவர்.
அயோத்திதாசரை முற்றிலும் புதிய கோணத்தில் விவாதிக்கும் ‘அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை’ என்ற நூல், நாட்டுப்புறவியல் துறை சார்ந்த அடிப்படை நூலாகத் திகழும் ‘தமிழ் நாட்டுப்புறவியல்’, மிகுந்த சர்ச்சைக்கும் விவாதத்திற்கும் உள்ளான ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’, திரைப்படக் கட்டுரைகளின் தொகுப்பான ‘இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?’, பெரிதும் வரவேற்பைப் பெற்ற ‘யாதுக் காடே யாவரும் மிருகம்’ போன்ற நூல்களின் ஆசிரியர்.
இவரது சமீபத்திய நூலான ‘ஜல்லிக்கட்டு - கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’ தொடர்ச்சியான விவாதங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ் எழுத்துலகின் உச்சம் என்றும் முன்னுதாரணங்கள் இல்லாதது என்றும் கருதப்படும் இந்நூல், சமகாலத் தமிழக அரசியலை முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் விளக்குகிறது.