கவிதை இலக்கியம்

செ.பிரேம்குமார் கவிதைகள்

செ. பிரேம்குமார்
02 Sep 2026
0

நெடுக
பூக்களின் கால்தடம்
போனேன்
நெடுக
பட்டாம்பூச்சிகளின் கால்தடம்
போனேன்
நெடுக
தேனின் கால்தடம்
ரொம்ப திகட்டியது
பின்திரும்ப பார்த்தேன்
நெடுக
என் கால்தடம்

***

ஒன்றன்பின் ஒன்றாய்
இரண்டு
மலைகள்
முன்னது முழுவதும் 
நிழல்
பின்னது முழுவதும்
வெயில்

மலைகளிடையே இருந்து
வானேகுகிறது
பெயரறியாப் பறவை

அதன் உடலில் நிழல்
அதன் நிழலில்
அத்தனை
ஒளி

***

பஞ்சாரத்துள் ஆட்டுக்குட்டிப் போல்
மலைமேல் படுத்திருக்கிறது
மேக நிழல்
நிழல் ஆடு
பைய மேயத்தொடங்குகிறது மலையை

அதட்டி அதட்டி
சரியான இடம் பார்த்து
மேய்க்கிறது சூரியன்

மேய்ப்பன்
பெருமேகம் ஒன்றினுள்
சற்று அசர
மொத்த மலையையும் சாப்பிடுகிறது
ஆடு

எங்கள் ஆக்கங்களை அவ்வப்போது பெற 'சீர்மை' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

நிலமெங்கும் பூத்த முகம்காலச்சுவடுசாகுல் ஹமீதுபிப்ரவரி தினம்அப்பாவின் குழிநான் ஏன் பதிப்பிக்கிறேன்ஒளிரும் சொற்கள்அதிகாரம்காஃப்காவின் காதுகள்பிரான்ஸ் காஃப்காவேறொரு மழைதலித் இலக்கியம்அக்காக்கள்ரமீஸ் பிலாலிழ என்ற பாதையில் நடப்பவன்இலக்கியக் கூட்டம்ரூமி‘நகர மயமாக்கம்கருத்தரங்குகள்பொம்மை கார்இலக்கியம்நாஞ்சில்நாடன்ஆய்வுசிறுகதைஎழுத்தாளரின் மரணம்திருச்சி வாழ்க்கைபிம்ப அரசியல்கு இலக்கியன்ஏ ஜி கௌதம்தாரா கேம்பெல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!