மேசையில் அங்குமிங்கும் ஓடிய
அருவெறுப்பான கரப்பானை
ஒரு பூவைப் போல
வலிக்காமல்
கீழே தள்ளினார் எதிர் சீட்டுக்காரர்
அனிச்சையாக நசுக்க எழுந்த
பூட்ஸ் கால்கள்
தானாக பின்வாங்கின
அன்பும் கொட்டாவியைப் போல
ஒரு தொற்று வியாதிதானே
***
வளைந்து நெளிந்து செல்கிறது
காலடியில் நீர்ப்பாம்பு
குழந்தையின் சிறுநீர்
***
இருட்டறையில் தனியே
இருந்தவரிடம் கேட்டேன்: "இங்கு அமரலாமா?"
"இயலாது. நான் முன்பு தனியறையில் அமர்ந்திருந்தவள்"
அவ்வளவு பெரிய அறையில்
தனியாக இருக்குமவரைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு
கதவை அறைந்து சாத்திவிட்டு
நிகழ்காலத்திற்கு விரைந்து வந்தேன்
***
அவர்கள் எல்லாவற்றையும் துடைத்துவிட்டு
மீண்டும் புதிதாக ஆரம்பிக்கிறார்கள்
யாருமே நடக்காத
புதிய பாதையில் நடக்கிறார்கள்
தலைக்கனமின்றித் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கிறார்கள்
தனது அழுக்குகளை
எப்போதும் மறைப்பதில்லை
தனக்குத் தெரிந்ததைத் தயங்காமல் அள்ளித் தருகிறார்கள்
பனித்துளியையும் புதுப்பூவையையும்
ஒரு குழந்தையைப் போலப் பார்க்கிறார்கள்
கற்றுக் கொள்கிறார்கள்
சாகா வரம் பெற்றவர்களைப் போல
இவ்வுலகை அவ்வளவு நேசிக்கிறார்கள்
கடைசியில்
கைப்பிடித்து ஆறுதலலிக்கவும்
ஆளின்றி
அனாதையாகச்
செத்துப் போகிறார்கள்.







பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.

கண்ணன் விஸ்வகாந்தி
ரமீஸ் பிலாலி
ஜார்ஜ் ஜோசப்
அரிசங்கர்
ராஜா ராமசுவாமி
டி. தருமராஜ்
அருண் நெடுஞ்செழியன்
து. பிரபாகரன்
நஜீப் மஹ்ஃபூழ்
தி. மரிய தனராஜ்
கண்ணன்
பெருமாள் முருகன்
Be the first person to add a comment.